பக்கம் எண் :

பக்கம் :82பூங்கொடி

பூங்கொடி சுவடிகள் பெறுதல்

 
  நவையிலாய்! நின்னூர் ஆங்கண் நாடொறும்
அன்பாற் பணிபுரி மலையுறை யடிகள்
 
  தம்பால் இவற்றின் தகவெலாம் கேட்குவை' 125
  என்றவள் உரைத்தலும் இளையவள் மகிழ்ந்து
`நன்றுநன் றன்னாய்' என்றவள் மொழிந்து
வணங்கித் தொழுது வாங்கினள் செங்கையில்;
 
 

பூங்கொடியின் பூரிப்பு

 
  அணங்கிற் கின்பம் அகத்தினிற் பொங்க  
  `அன்னாய்! என்னுயிர் அன்னாய்! தமிழே! 130
  ஒன்னார் மனமும் உருக்குந் தமிழே!
அகப்பகை புறப்பகை கடந்தாய் தமிழே!
தகப்பன் தாயெனத் தகுவழி காட்டி
மிகப்பல் லறநூல் மொழிந்தாய் தமிழே!
 
  உலகம் வியக்க ஒப்பிலாக் குறளால் 135
  கலகம் தவிர்ப்பாய் கன்னித் தமிழே!
இறக்கும் வரைநின் பணியே யல்லால்
துறக்கமொன் றுண்டெனத் துணியேன் தமிழே!
இடுக்கண் வருங்கால் துடைப்பாய் தமிழே!
 
  மொழிவளம் மிகுந்தாய் முதன்மைத் தமிழே! 140
  பழியிலா நின்னைத் தொழுதக வல்லது
வாழ்த்துதற் கென்வாய் வகையறி யாதே'
 
     
 

பூங்கொடி தாயகம் மீளல்

 
    
  இவ்வணம் பலபட இசைத்து, முதுமை
கவ்விய அன்னையைக் கைகுவித் தேத்திப்
 
  பவ்வங் கடந்து பாவை பூங்கொடி 145

---------------------------------------------------------------

  அணங்கு - பூங்கொடி, ஒன்னார் - பகைவர், துறக்கம் - வீடுபேறு, பவ்வம் - கடல்.