பக்கம் எண் :

ஏடுபெற்ற காதைபக்கம் : 83

  பிரிவாற் கலங்கிப் பேதுறும் நெஞ்சத்
தருண்மொழி வதியும் ஆயிடைத் தோன்றித்
துயரங் களைந்து தூயநற் றமிழால்
இயலுங் கூத்துநூல் இசைநூல் காட்டி,
 
  `நமக்கிவை துணையாம் நாட்டில் தமிழிசை 150
  முழக்குதற் கினிநாம் முயலுதல் வேண்டும்;
தடுப்பார் தமக்குக் கொடுப்போம் ஓலை
படிப்பார் அறிவர் பைந்தமிழ் இசையை'
 
  என்றாங் கிருந்தனள் இவ்வுரை மொழிந்தே. 154