பக்கம் எண் :

மலையுறையடிகள் வாழ்த்திய காதைபக்கம் : 85

  ஆட்டினம் ஆயினர் ஆதலின் அவர்பால்
கல்வித் தொண்டே கடவுள் தொண்டெனச்
சொல்லுதல் வேண்டும் மெல்லியற் பூங்கொடி!
 
 

கல்விப் பயன்

 
  ஓதிய கல்வி உயர்வினை நல்கும், 25
  சாதியில் உயர்வு தாழ்வுகள் சாய்க்கும்
குடிக்குயர் வாக்கும், கொடுமைகள் போக்கும்,
பிடித்துள பேதமைப் பிணியினைத் தொலைக்கும்,
அடிமைத் தளைகளை அறுக்கும், உலகில்
 
  படிறு செய்திடப் பார்ப்பார் தமக்கிடம் 30
  இல்லா தொழிக்கும், இன்பம் பயக்கும்
பொல்லா வினைகளைப் புதைக்கும், நாளும்
மான வுணர்வினை வளம்பெற வளர்க்கும்
ஆன கல்வி, அவலக் கவலை
 
  கடத்தற் கொருமரக் கலமும் ஆகும்; 35
     
 

கற்றார் செய்தொழில்

 
     
  மடக்கொடி நல்லாய்! மாநிலத் திந்நாள்
கல்விப் பணியே காத்திடல் வேண்டும்;
நல்லஇச் செயலால் நம்மனோர் அறிவொளி
எய்திடப் பெறுவர்; எய்திய காலை
 
  உய்வகை அறிவர்; உணர்வும் பெறுவர்; 40
  எப்பொருள் ஆயினும் மெய்ப்பொருள் காண்பர்;
தப்பெதும் புரியார்; தாய்மொழி அன்பும்
இயல்பினில் வாய்க்கும்; இந்தநல் லன்பால்
மயலறி வொழித்து மாண்புகள் ஆக்குவர்;
 
  பிறமொழி தமிழிற் பெருகுதல் காணின் 45
  அறவே ஒதுக்குதற் காவன இயற்றுவர்;  

---------------------------------------------------------------

  ஆட்டினம் - ஆடுகள், படிறு - வஞ்சனை, உய்வகை - முன்னேறும் வழி.