| மீண்டுந் தமிழிசை வேண்டும் எனினோ மொழிவெறுப் புணர்ச்சி என்றதை மொழிகுவர்; பழுதுறு மதியர் பான்மையஃ தன்றோ? அகப்பகை தமிழை அழிப்பதைக் காணுதி! | |
| செகுத்ததை ஒழித்துச் செந்தமிழ் பேணுதி! | 100 |
| | |
| தொண்டர்க்கு வேண்டுவன | |
| | |
| தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும், கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும், துயரெது வரினும் துளங்கா நிலையும், அயரா உழைப்பும், ஆயும் அறிவும், | |
| தந்நல மறுப்பும், தகவும் வேண்டும் | 105 |
| இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே; | |
| | |
| இருளும் தொண்டும் | |
| | |
| விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன் துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும் ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்; | |
| கழியிருள் அதனுள் கடந்தனன் செல்லின் | 110 |
| வழியதும் புலனாம் ஒளியுங் காணுவான்; பொதுநலம் புரிவோர் நிலையதும் இதுவே; முதன்முதற் புகுவோர்க்கு மலைப்பே முந்துறும், மலைப்பும் இளைப்பும் மதியா ராகி | |
| உழைப்போர், வருதுயர் ஒன்றுங் காணார்; | 115 |
| அரிதாய் மலைப்பாய்த் தோன்றிய அப்பணி சிறிதாய் எளிதாய்ச் செயற்படும்; அதனால் என்மொழி யாவும் ஏற்றுளம் பதித்துத் தென்மொழி உயரத் தேன்மொழி, தொண்டுசெய்! | |
| | |
| இசைப்பணிக்கு எழுக எனல் | |
| | |
| இசைத்தமிழ் முழக்குக எங்கணும் பெரிதே! | 120 |
--------------------------------------------------------------- |
| கழியிருள் - மிகுந்த இருள், தேன்மொழி - பூங்கொடி. | |
| | |