பக்கம் எண் :

மலையுறையடிகள் வாழ்த்திய காதைபக்கம் : 89

  வசைத்தொழில் புரிவோர் வாய்தனை அடக்குக!
இசைப்பணி புரிதல் இனிநமக் கேலாது
வசைத்தொழில் ஈதென வாளா விருந்தனை!
திசைத்திசைச் சென்று செந்தமிழ்ப் பாட்டின்
 
  இசைத்திறன் காட்டுதி இனிநீ தாயே! 125
  நின்னுயிர் பெரிதோ? தென்மொழி பெரிதோ?
இன்னுயிர் ஈந்தும் இசைத்தமிழ் பேணித்
தோமறு பணிசெயத் துணிந்தெழு நீ'என,
 
     
 

அடிகளார் வாழ்த்து

 
     
  ஆம்என மொழிந்தனள் ஆய்தொடி அரிவை;  
  `தாய்க்குலம் வாழ்க! தமிழினம் வாழ்க! 130
  ஏய்க்கும் தொழில்போய் ஏர்த்தொழில் வாழ்க!
வாழ்கநின் னுள்ளம்! வாழ்கநின் தொண்டு!
வாழ்கபல் லாண்'டென வாழ்த்தினர் அவரே;
அருண்மொழி அன்னையும் அல்லியும் அடிகள்
 
  தருவிடை பெற்றுத் தனியே கினரே. 135

--------------------------------------------------------------------------------

  வாளா - செயலின்றி