பக்கம் எண் :

பக்கம் :90

13. மீனவன் வரலாறுணர்ந்த காதை

அடிகளார் கூறத்தொடங்குதல்

 

 

இசையியல் இயம்பும் ஏட்டுச் சுவடி
வசையிலா நினக்கு வழங்கிய மீனவன்
தன்றிறம் கூறுவென் தயங்கிழை! கேளாய்,
நின்பெரும் பணிக்கும் நீள்பயன் விளைக்கும்;
 
     
 

குறியிடத்திற் காதலர்

 
     
  நெல்லூர் என்னும் நல்லூர் ஆங்கண் 5
  கழனி வினைபுரி களமர் குடிதனில்
எழில்நிறை செல்வி இடுபெயர்ப் பொன்னி
நல்லவள் ஒருத்தி, கொல்லுலைத் தொழில்புரி
வில்லவன் என்னும் விடலை தன்னொடு
 
  அறியாக் காதல் வாழ்வின ளாகிக் 10
  குறியிடம் ஒருநாள் கூடினள் நிற்க;  
     
 

அலர் பரவியது

 
     
  நெறியிடை ஏகும் நெடுமகன் ஒருவன்
கண்டனன் அவர்நிலை காதல் அறியான்,
அண்டையர் மறைசெயல் அறிவதும் தீமை
 
  அதனைப் பலர்க்கும் அறைவதும் தீமை; 15
  இதனை உணரான் எதிர்ப்படுவோர்க்கெலாம்
புதுமை கண்டவன் போலதை விளம்ப
மனைதொறும் அம்மறை வாயிடம் பெற்றது
நினையா வகையிற் பனையாய் வளர்ந்தது;
 
     
 

ஊரார் வாய்

 
     
  பாரோர் அறிய ஒருபொருள் பரப்ப 20

---------------------------------------------------------------

  தயங்கிழை - பூங்கொடி, கழனி - வயல், களமர் - உழவர், விடலை - சிறந்த ஆடவன், நெறியிடை - வழியில், நெடுமகன் - மூடன், மறை - இரகசியம்.