| ஊரார் வாய்போல் ஒன்றிலை உலகில் உற்றொரு மறையை மற்றவர்க் குரைக்க முற்படும் மாந்தர் கற்பனை என்னே! கேட்டிடும் ஒன்றைக் கண்கால் படைத்து | |
| நாட்டிடை நடமிட நற்பணி புரிகுவர்; | 25 |
| | |
| தந்தையின் சீற்றம் | |
| | |
| மறைபிறர் அறிய மலர்ந்தஅவ் வலர்மொழி குறையிலாக் களமர் குலமகன் செவிபுகத் தணியாச் சினமொடு தன்மகட் கூஉய்த் `துணியாச் செயல்செயத் துணிந்தனை! என்குல | |
| அணையாப் பெருமையை அணைத்தனை பேதாய்! | 30 |
| நினைகுவை நீயிப் பழிசெய என்றே நினைந்தேன் அல்லேன் முனைந்தாய் கொடியாய்! மேதியிற் கீழென மேலோர் நினைக்கச் சாதி கெடுக்கச் சதிசெய் தனையே! | |
| வீதி சிரிக்க விளைத்தனை சிறுசெயல்! | 35 |
| | |
| இற்செறித்தல் | |
| | |
| பெற்றான் ஒருவன் உற்றான் என்றும் சற்றே நினைந்திலை! சாற்றுதல் கேள்,இனிப் புறச்செல வொழிப்பாய்! போற்றுதி மானம்! அறச்செயல் விடுத்துநீ அகலுவை யேல்,என் | |
| கதிர்அரி வாள்உன் கழுத்தினை அரியும், | 40 |
| மதியொடு நட!என் மானமே பெரி'தென இடிபடப் பேசி இற்செறித் தனனே; | |
| | |
| தடைபடாக் காதல் | |
| | |
| கொடிபடர் முல்லையின் வெடிமலர் மணத்தைக் கூர்முள் வேலியாய் காத்தலுங் கூடுமோ? | |
| ஏர்முனை பாறையில் எவ்வணம் உழுதிடும்? | 45 |
--------------------------------------------------------------- |
| நினைகுவை - நினைப்பாய், மேதி - எருமை, புறச்செலவு வெளிச் செல்லல், இற்செறித்தனன் - வீட்டிலடைத்தான். | |
| | |