பக்கம் எண் :

மீனவன் வரலாறுணர்ந்த காதைபக்கம் : 93

  கயிறே துணையெனக் கருத்தினிற் கொண்டுளேன்' 70
  என்றனள் பொன்னி; இவ்விடை கேட்டு,  
     
 

வில்லவன் எழுச்சி

 
     
  `நன்றுரை புகன்றனை! நமக்கேன் சாவு?
வென்றுல காள்வோம்; வீணரை எதிர்ப்போம்;
நினைப்பெறின் உலகை நினையேன் மதியேன்;
 
  முனைத்தெழு பகையை முறிப்பேன் சிரிப்பேன்; 75
  நின்னுளம் யாதோ! என்னுளம் வாழ்வோய்!'  
     
 

உடன் போக்கு

 
     
  என்னலும், மின்னலின் இடையினள் துவண்டு
கன்னலின் மொழியாற் `கருத்துரை வெளிப்பட
உரை'எனத், தலைவன் `உடன்போக்' கென்றனன்;
 
  `விரைவாய்! விரைவாய்! விடுதலை பெறுவோம்; 80
  மீன்,புனல் வாழ வெறுப்பதும் உண்டோ?
ஏன்உனக் கையம்? எழுவாய் தலைவா!
நின்தாள் நிழலே என்பே ரின்பம்'
என்றவள் செப்ப, இருவரும் அவ்வயின்
 
  ஒன்றிய உணர்வால் உடன்போக் கெழுந்தனர்; 85
     
 

தந்தையின் மானவுணர்வு

 
     
  துன்றிருட் கணமெலாம் சென்றிடக் கதிரோன்
ஒளிமுகங் காட்டி உலகெலாம் விளக்கக்
களமர்தம் குலமகன் கண்விழித் தெழுவோன்
தன்மகட் காணான் தணியாச் சினமிகப்
 
  `புன்மகள் தன்னிலும் என்குல மானம் 90
  ஒன்றே பெரிதாம்' என்றே இருந்தனன்;  
     
 

பொன்னியின் செல்வன்

 
     
  ஒன்றிய உணர்வால் உடன்போகக் கெழுந்தோர்
சென்றொரு சுரநகர் சேர்ந்தனர்; ஆங்கண்
 

---------------------------------------------------------------

  அவ்வயின் - அவ்விடம், துன்றிருள் - நிறைந்த இருள்.