பக்கம் எண் :

பக்கம் :94பூங்கொடி

  வாழும் நாளில் மகப்பே றுறுங்கால்  
  ஆண்மக வுயிர்த்தவள் ஆவி துறந்தனள்; 95
  ஊண்புசி யானாய் உழலுமங் வில்லவன்
புரிமனை காதற் பொன்னி நல்லவட்
பிரிவினை ஆற்றான் பெற்றஅம் மகவை
உறுமக வில்லா ஒருவன் பாற்படுத்
 
  தேகினன் வெறுத்தே; இன்னுயிர் நீத்தஅப் 100
  பொன்னியின் செல்வன்இம் மீனவன், பூங்கொடி!  
     
 

கலை பயில் தெளிவு

 
     
  நன்மக விதனை நயந்து வாங்கியோன்
தன்மனை யாளும் தாம்பெறு பேறெனக்
கண்ணென மணியெனக் காத்து வளர்த்தனர்;
 
  எண்ணும் எழுத்தும் எழிலோ வியமும் 105
  பண்ணும் பிறவும் பழுதிலா துணர்ந்தே
செவ்விய நடையினன் செந்தமிழ் வல்லுநன்
அவ்வூர் மக்கள் அறிஞன்என் றியம்ப,
 
     
 

கோவிலில் மீனவன்

 
     
  வாழ்வோன் ஒருநாள் வானுயர் கோவில்  
  சூழ்வோன் உட்புகச் சொற்றமிழ் கேட்டிலன் 110
  வழிபா டியற்றி வாழும் அவர்பால்
`இழிவாம் இச்செயல்! இனிமேல் தமிழால்
வழிபாட் டுரையை வழங்குக' என்னலும்,
 
     
 

மறியல் போராட்டம்

 
     
  `நெறியன் றாம்'என நிகழ்த்தினர் மறையோர்;  
  மறியல் செய்தனன், மற்றவர் கூடிச் 115
  சிறியன் இவன்தான் செருக்குற் றானெனத்  

---------------------------------------------------------------

  பேறு - செல்வம், உயிர்த்தவள் - பெற்றவள், ஊண் - உணவு, உழலும் - வருந்தும், ஆற்றான் - தாங்காதவன், செவ்விய நடை - நல்லொழுக்கம்.