| தூணிற் கட்டினர்; `தூய்தமிழ்ப் பெரியீர்! வீணில் தவறுகள் விளைத்திட முனைந்தீர்! உருவுகண்ட டெள்ளேல்! ஒருபொருள் யார்வாய்க் | |
| கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதே அறிவாம், | 120 |
| கோட்பகை ஒன்றே மேற்பட நினைந்து நாணுச் செயல்செயல் நற்றமிழ் மரபோ?' | |
| | |
| மீனவனைப் பழித்தல் | |
| | |
| என்றனன்; அவ்விடை இருந்தவர் ஒருவர் `நன்று நன்றடா! மரபினை நவிலக் | |
| கூசினை யல்லை! குலவுநின் மரபோ | 125 |
| ஏசலுக் குரியது! வேசியின் பிள்ளை! சாதி கெடுத்தவள் தந்தைசொல் விடுத்தவள் வீதியில் நின்றவள் விடுமகன் நீயோ எம்பெரு மரபை இகழ்ந்துரை கூறினை? | |
| வம்பினை விலைக்கு வாங்கினை சிறியோய்!' | 130 |
| என்றிவை கூறி ஏளனம் செய்தனர்; | |
| | |
| மீனவன் வெஞ்சினம் | |
| | |
| `பெரியீர்! ஏளனப் பேச்சினை விடுமின்! சிறியேன் தீங்கு செய்ததும் உண்டோ? அன்னையைப் பழித்தீர் ஆணவப் போக்கால், | |
| என்னைப் பிணித்தீர் இலையேல் நும்முடல் | 135 |
| துண்டு துண்டாத் துணிப்பென், பிழைத்தீர்! | |
| | |
| காதல் ஒரு குற்றமா? | |
| | |
| கண்ட தவறென் காரிகை கற்பில்? ஒருவனை உளத்தால் உன்னினள், எதற்கும் வெருவிலள், அவனே விழைமண வாளன் | |
| என்றவன் துணையை ஏற்றனள் காதலில் | 140 |
--------------------------------------------------------------- |
| உருவு - உருவம், எள்ளேல் - இகழாதீர், கோட்பகை - கொள்பகை, பிணித்தீர் - கட்டினீர். | |
| | |