பக்கம் எண் :

பக்கம் :96பூங்கொடி

  வென்றனள், பொன்னி, வீரத் தாயென
நின்றவள் கற்பின் நிறைதனை இகழ்ந்தீர்!
 
     
 

குணமிழந்தாள் நும் மகள்

 
     
  கணவனை இழந்த காரிகை நும்மகள்
குணமிழந் தாளிதைக் குவலயம் அறியும்
 
  கருவுற் றாளெனக் கண்டதும் நெஞ்சம் 145
  வெருவுற் றிழைத்த வினையெலாம் மறந்தீர்!
கிணறே உரைக்கும்நும் கீழ்மைக் குணமெலாம்,
உணரா தும்மை உயர்வா நினைத்தீர்!
கொடும்பழி யஞ்சாக் குலத்தினில் தோன்றி
 
  மிகும்பொருள் ஒன்றால் மேலவர் போல 150
  நாடகம் நடித்தீர்! நல்லவள் கற்பில்
கேடுரை கிளந்தீர்! கிளறேல் என்சினம்!
 
     
 

சாதி ஏது

 
     
  சாதி என்றொரு சொல்லினைச் சாற்றினீர்
ஆதியில் நம்மிடம் அச்சொல் இருந்ததோ?
 
  பாதியில் புகுந்தது பாழ்படும் அதுதான்; 155
  தொழிலாற் பெறுபெயர் இழிவாய் முடிந்தது;
அழியும் நாள்தான் அணிமையில் உள்ளது;
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென் றோதிய
திருக்குறள் உண்மைநும் செவிப்புக விலையோ?
 
  கதிரும் நிலவும் காற்றும் மழையும் 160
  எதிரும் உமக்கும் எமக்கும் ஒன்றே!
தவிர்த்தெமை நும்பாற் சாருதல் உண்டோ?
கபிலர் அகவல் கண்டதும் உண்டோ?
 
     
 

காலம் அறிந்து கருத்தை மாற்றுக

 
     
  சாதிப் பெயர்சொலித் தாழ்வும் உயர்வும்  
  ஓதித் திரியின் உலகம் வெறுக்கும்; 165

---------------------------------------------------------------

  குவலயம் - உலகம், கதிர் - கதிரவன்.