| பிறப்பால் தாழ்வுரை பேசுவீ ராயின் சிறப்பால் நீவிர் செப்புநும் முன்னையர் மூலங் காணின் ஞாலஞ் சிரிக்கும்; காலங் கருதிக் கருத்தினை மாற்றுமின்'; | |
| தோலா நாவினன் துணிந்திவை கூறி, | 170 |
| வேட்டங் கருதிக் காட்டகம் போகிக் கோட்டுக் களிற்றொடு கொடும்போர் விளைத்து மீண்ட வேங்கையின் நீண்டுயிர்ப் பெறிய, | |
| | |
| முதியோன் தூண்டுதல் | |
| | |
| மூண்ட சீற்றத்து முதியோன் கொதித்துப் | |
| `பெருமறை மந்திரம் பிழைஎனப் பிதற்றும் | 175 |
| சிறுமகன் நாத்திகன் செருக்கினைப் பாரீர்! இன்றெனப் பேசினன் இவனைநாம் விடுத்தால் நாளைநும் பழிக்க நாணான் நடுங்கான் கோழை எனநமைக் கொண்டனன் போலும்; | |
| தொழுதகு முன்னையர் வழிமுறை பிழைஎனப் | 180 |
| பழுதுரை கூறிய பாவியைப் பொறுத்தீர்! ஆத்திகப் பெரியீர்! ஆண்டவர் பழித்தனன் ஆத்திரம் கொண்டிலீர் அஞ்சினீர் கொல்'என; | |
| | |
| கயவர் தாக்குதல் | |
| | |
| முரடர் சிலர்அம் மீனவன் முகத்தில் | |
| குருதி சிதறக் குத்தினர்; மயக்குறக் | 185 |
| கட்டவிழ்த் தேகினர்அக் கருணை மாந்தர்; சுட்டாற் செம்பொன் கெட்டா போகும்? முட்டாள் தடுக்க முற்படின் பயணம் தொட்டார் குறியிடம் விட்டொழி வாரோ? | |
| மயங்கினன் கிடக்கும் மகன்றனை வளர்த்தவன் | 190 |
| புயங்களிற் சுமந்து தன்மனை புகுந்தனன்; | |
--------------------------------------------------------------- |
| தேலா - தோற்காத, வேட்டம் - வேட்டை, கோடு - கொம்பு, முட்டாள் - முள்தாள். | |
| | |