பக்கம் எண் :

பக்கம் :98பூங்கொடி

 

வளர்த்தவள் வாய்மொழி

 
     
  வயங்கிழை நல்லாள் வாய்விட் டலறித்
`துரும்பும் படாஅவகை விரும்பி வளர்த்தேன்
குறும்பர் இவ்வணம் கொடுந்துயர்ப் படுத்தவோ?
 
  அந்தோ அந்தோ'என் றழுவோள் முன்னர் 195
  நொந்துழல் உடலினன் நுண்ணிதின் உயிர்க்கக்
கண்ணீர் மல்கிக் கசிந்துளம் உருகிப்
புண்ணீர் துடைத்துப் பொருந்திய மருந்திட்
டாற்றி, `என்துயர் ஆற்றினை மகனே!
 
  ஏற்றுள இப்பணி இனிமேல் வேண்டா 200
  நமக்கேன் ஊர்ப்பகை? நல்லது கெட்டது
சுமப்பவர் நாமே! சொல்வது கேள்'எனத்
 
     
 

மீனவன் உணர்ச்சி மொழி

 
     
  `தாயே வரைத்தேன் தாம்பெற முயலுநர்
ஈயின் தாக்குதல் ஏற்பதும் வேண்டும்;
 
  குலவுநன் முத்துக் குளிப்பவர் கடல்மிசை 205
  அலைவரல் காணலும் அடங்கவோர் இல்லை;
தேனும் முத்தும் மானும்நம் செந்தமிழ்;
யானும் அதனை நயந்துளேன் ஆதலின்
அலைக்கும் ஈக்கும் அஞ்சேன், என்பணி
 
  நிலைக்கும் வெல்லும் நீமனங் கலங்கேல்' 210
  எனவாங்கு
உரைத்திவன் இருக்க ஊர்க்குறு மாக்கள்
 
     
 

ஊரவர் தொல்லை

 
     
  துரைத்தனம் செய்தனர் தொல்லைகள் தந்தனர்;
வளர்த்தவர் அவற்றால் வாடி வதங்கினர்;
 
  இடுக்கண் இவர்க்குறல் என்னா லன்றோ? 215
  துடுக்கர் புன்செயல் தொலைவதெந் நாளோ?  
  விடுத்திவ் வூரின் வெளிப்படல் நன்றென,  

---------------------------------------------------------------

  படாஅவகை - படாமல், வரை - மலை, குறுமாக்கள் - தீயவர், துரைத்தனம் - அதிகாரம்.