| செவிலி, | | உன்பிதா உலகாள் வேந்த னன்பாய்ச் |
| | சொல்லா யென்னில் துப்பிதழ் துடித்துச் |
| | சொல்ல வுன்னியுஞ் சொல்லா தடக்கில் |
| | யாம்படு துயர மறிந்துங், |
| 30. | காம்படு தோளீ ! கருதாய் போன்மே. | 2 |
| | |
| ஜீவ. | | ஐயோ ! இதற்கென் செய்வேன் ! ஆ ! ஆ ! |
| | பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்? |
| | பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற் |
| | சோறே போலப் பேரே யன்றி |
| 35. | வேறே யென்பயன் விளைக்கு மென்றுனி |
| | நெடுநாள் நைந்து நொந்து, கெடுவேன் ! |
| | பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி |
| | வந்துழி யகலும் பனியெனச் சுந்தர |
| | முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக் |
| 40. | கனியென வுனையான் கண்டநாள் தொட்டு, |
| | நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும் |
| | என்மிகை நீக்கி யின்ப மெய்தி, |
| | உன்மன மகிழ்ச்சிக் குதவுவ வுஞற்ற |
| | உயிர்தரித் திருந்தேன். செயிர்தீ ரறமும் |
| 45. | வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையும் |
| | தங்கிய வுன்னுள மென்னுளந் தன்னுடன் |
| | எங்குங் கலந்த வியல்பா லன்றோ |
| | மறந்தே னுன்றா யிறந்த பிரிவும்? |
| | உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில், |
| 50. | எதுவோ வுறுதி யியம்பாய் ! |
| | மதிகுலம் விளங்க வருமனோன் மணியே ! | 3 |
| | |
| மனோன்மணி. | | எந்தையே ! எனதன் பினுக்கோ ரிழுக்கு |
| (கண்ணீர் துளும்பி) | | வந்த தன்று. மேல் வருவது மிலை.இலை. |
| | உரைக்கற் பாற்றதொன் றில்லை. |
| 55. | உரைப்பதெப் படியா னுணரா தொழியிலே? | 4 |
| | |
| ஜீவ. | | குழந்தாய் ! என்குலக் கொழுந்தே ! அழாய்நீ. |
| | அழுவையே லாற்றேன். நீயழ லிதுவரைக் |