| | கண்டது மிலை.யான் கேட்டது மிலையே. |
| | பெண்களின் பேதைமை யென்னே ! தங்களைப் |
| 60. | பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும், |
| | விழுமம் விளைத்துத் தாமே யழுவர். |
| | |
| (வாணியை நோக்கி) | | என்னே யவர்தம் ஏழைமை ! மின்னேய் |
| | மருங்குல் வாணீ ! வாரா யிப்புறம். |
| | அருங்கலை யாய்ந்தநின் றந்தைசொன் மதியும், |
| 65. | உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்? |
| | நலமே சிறந்த குலமே பிறந்த |
| | பலதேவ னாமொரு பாக்கிய சிலாக்கியன் |
| | தன்னைநீ விடுத்துப் பின்னையோர் பித்தனை |
| | நச்சிய தென்னை? சீச்சீ ! |
| 70. | நகையே யாகும் நீசெயும் வகையே. | 5 |
| | |
| வாணி. | | அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே |
| | நிகழுமென் சிறிய நினைவெலாம் விரித்து |
| | விநயமாய் நின்பால் விளம்ப வெனது |
| | நாணம் நாவெழா தடக்கு மாயினும் |
| 75. | பேணி யொருமொழி பேசுவன். |
| | நேசமில் வதுவை நாசகா ரணமே. | 6 |
| | |
| ஜீவ. | | புதுமை நீ புகன்றாய் ! வதுவைமங்கையர்க்குப் |
| | பெற்றா ராற்றுவர். ஆற்றிய வழியே |
| | தையலார் மையலாய் நேயம் பூண்டு |
| 80. | வாழ்வது கடமை. அதனில் |
| | தாழ்வது தகுதியோ தருமமோ? சாற்றே. | 7 |
| | |
| வாணி. | | கற்பனைக் கெதிரா யற்பமும் மொழியேன். |
| | ஆயினும் ஐயமொன் றுண்டு. நேயமும் |
| | ஆக்கப் படும்பொரு ளாமோ? நோக்கில் |
| 85. | துன்பே நிறையும் மன்பே ருலகாம் |
| | எரியுங் கானல் விரியும் பாலையிற் |
| | திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது |
| | தங்கி யங்கவ ரங்கங் குளிரத் |
| | தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில் |