பக்கம் எண் :

மனோன்மணீயம்
26

90.நேருந் தாக நீக்குவான் நிமல
ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும்,
ஆறலைக் கள்வ ரறுபகை மீறில்
உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும்,
முயற்சியாம் வழியி லயர்ச்சி நேரிடில்
95.ஊன்றுகோ லாயவ ரூக்க முயர்த்தியும்
இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி,
இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி,
பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய்,
இல்லற மென்பதன் நல்லுயிரே யாய்,
100.நின்ற காதலின் நிலைமை, நினையில்,
இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல்
இருவர் சிந்தையு மியல்பா யுருகி
யொன்றாந் தன்மை யன்றி, ஒருவரால்
ஆக்கப் படும்பொரு ளாமோ?
105.வீக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே ! 8
ஜீவ. ஆமோ வன்றோ யாமஃ தறியேம்.
பிஞ்சிற் பழுத்த பேச்சொழி. மிஞ்சலை.
மங்கைய ரென்றுஞ் சுதந்தர பங்கர்.
பேதையர். எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர்.
110.முதியவுன் றந்தை மதியிலுன் மதியோ
பெரிது?மற் றவர்தமி லுன்னயம் பேண
உரியவர் யாவர்? ஓதிய படியே
பலதே வனுக்கே யுடன்படல் கடமை.
வாணி. இல்லையெனில்? -
ஜீவ.

கன்னியா யிருப்பா யென்றும்.

வாணி. 115.சம்மதம்.
ஜீவ.

கிணற்றிலோர் மதிகொடு சாடில்

எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய் !
கன்னியா யிருக்கி லுன்னழ கென்னாம்?
அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்?