பக்கம் எண் :

மனோன்மணீயம்
27

வாணி. விரைதரு மோசிறு கறையா னரிக்கில்?
ஜீவ. 120.நனே பிடித்த முயற்கு மூன்றுகால்
ஆனா லெங்ஙனம்?
வாணி.

அரிவையர் பிழைப்பர்?

               (சேடி வர)
சேடி. சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில்.
கால நோக்கினர்.
ஜீவ.

சாலவு மினிதே.

ஆசனங் கொணர்தி.
(வாணியை நோக்கி)

யோசனை வேண்டாம்.

125.எப்படி யாயினுஞ் சகடர் சொற்படி
நடத்துவம் மன்றால், நன்குநீ யுணர்தி.
ஆயினுந் தந்தன மைந்துநாள்.
ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே. 9
வாணி, இறக்கினு மிறைவ ! அதற்கியா னிசையேன்.
130.பொறுத்தருள் யானிவண் புகன்ற
மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே. 10

(சுந்தர முனிவர் வர)

ஜீவ. (முனிவரைத் வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி,
தொழுது) இருந்தரு ளுதியெம் மிறைவ !
பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே. 11
சுந்தர, 135.தீதிலை யாதும்? க்ஷேமமே போலும்.
(மனோன்மணியை ஏதோ மனோன்மணி ! ஓதாய்
நோக்கி) வேறுபா டாய்நீ விளங்கு மாறே. 12
மனோன்மணி. கருணையே யுருவாய் வருமுனீ சுரரே !
(வணங்கி) எல்லா மறியுமும்பாற்
140.சொல்ல வல்லதொன் றில்லை. சுகமே. 13
செவிலி, கரும்பே ! யாங்கள் விரும்புங் கனியே !
(மனோன்மணியை முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு
நோக்கி) யார்வயி னுரைப்பாய் ! ஐயோ ! இதுவென்?