பக்கம் எண் :

மனோன்மணீயம்
28

(முனியை நோக்கி) ஆர்வமு ஞானமு மணிகல னாக்கொள்
145.தேசிக வடிவே ! செப்புமா றறிகிலம்
மாசறு மனோன்மணி தன்னுரு மாறி
நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம்.
மண்ணாள் மேனியும் ; உண்ணா ளமுதும் ;
நண்ணா ளூசலும் ; எண்ணாள் பந்தும் ;
150.முடியாள் குழலும் ; படியா ளிசையும் ;
தடவாள் யாழும் ; நடவாள் பொழிலும் ;
அணியாள் பணியும் ; பணியா ளேவலும் ;
மறந்தாள் கிளியும் ; துறந்தா ளனமும் ;
தூங்குவள் போன்றே யேங்குவள் ; எளியை !
155.நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை ;
கேட்டுங் கேட்கிலள் ; பார்த்தும் பார்க்கிலள் ;
மீட்டுங் கேட்பள் ; மீட்டும் பார்ப்பள் ;
தனியே யிருப்பள் ; தனியே சிரிப்பாள் ;
விழிநீர் பொழிவள் ; மெய்விதிர்த் தழுவள் ;
160.இங்ஙன மிருக்கி லெங்ஙன மாமோ?
வாணியும் யானும் வருந்திக் கேட்டும்
பேணி யிதுவரை யொருமொழி பேசிலள்.
அரசன் கேட்டு முரைத்திலள். அன்பாய்
முனிவ!நீ வினவியும் மொழியா ளாயின்
165.எவருட னினிமே லிசைப்பள்?
தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே ! 14
சுந்தர, (ஜீவகனை குழவிப் பருவ நழுவுங் காலை
நோக்கி) களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம்.
170.காதல் வெள்ளங் கதித்துப் பரந்து
மாத ருள்ளம் வாக்கெனு நீண்ட
இருகரை புரண்டு பெருமூச் செறியில்,
எண்ண மெங்ஙன நண்ணு நாவினை?
தாதா அன்பு போதா தாகுங்
175.காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி
சாலவும் மறந்தனை போலும். தழைத்துப்