| | படர்கொடி பருவம் அணையில், நட்ட |
| | இடமது துறந்துநல் லின்ப மெய்த |
| | அருகுள தருவை யவாவும், அடையின் |
| 180. | முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும் |
| | அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும். |
| | இலையெனி னலமிழந் தொல்கும். அதனால் |
| | நிசிதவே லரசா டவியில் |
| | உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. | 15 |
| | |
| ஜீவ. | 185. | எங்குல குருவே ! இயம்பிய தொவ்வும். |
| | எங்குள திக்கொடிக் கிசைந்த |
| | பொங்கெழில் பொலியும் புரையறு தருவே? |
| | |
| சுந்தர, | | உலகுள மற்றை யரசெலா நலமில் |
| | கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய, |
| 190. | ஜகமெலாந் தங்க நிழலது பரப்பித் |
| | தொலைவிலாத் துன்னலர் வரினு மவர்தலை |
| | யிலையெனும் வீரமே யிலையாய்த் தழைத்து, |
| | புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து, |
| | துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான் |
| 195. | கனியுங் கருணையே கனியாக் காய்த்து, |
| | தருமநா டென்னு மொருநா மங்கொள், |
| | திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப் |
| | புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன், |
| | நீங்கி லில்லை நினது |
| 200.. | பூங்கொடி படரப் பாங்காந் தருவே. | 17 |
| | |
| ஜீவ. | | நல்லது ! தேவரீர் சொல்லிய படியே, |
| | இடுக்கண் களைந்த விறைவ ! |
| | நடத்துவன் யோசனை பண்ணி நன்றே. | 18 |
| | |
| சுந்தர, | | யோசனை வேண்டிய தன்று, நடேசன் |
| 205. | என்றுள னொருவன். ஏவில், |
| | சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. |