| ஜீவ. | | கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி - |
| | |
| சுந்தர, (எழுந்து) | | அரஹா ! குருபா ! கிருபா நிதியே ! |
| | கரவாய் காவலன் ஈன்ற |
| 210. | பாவையை நீயே. காவாய் பசுபதே ! | 20 |
| | (சுந்தரமுனிவர் போக) |
| | |
| ஜீவ. | | தொழுதோம் ; தொழுதோம். செவிலி யவ்வறைக் |
| | கெழுதுங் கருவிகள் கொணராய். |
| | பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே. |
| | (ஜீவகன் முதலியோர் போக) |