| குடிலன், | | புத்தியே சகல சத்தியும் ! இதுவரை |
| (தனிமொழி) | | நினைத்தவை யனைத்து நிறைவே றினவே. |
| | உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த |
| | மதுரையாம் முதுநகர் விடுத்து மன்னனைப் |
| 5. | புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங் |
| | கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே. |
| | நாமே யரசும். நாமே யாவும். |
| | மன்னவன் நமது நிழலின் மறைந்தான். |
| | பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம். |
| 10. | மதுரையை நெல்லை யினிமேல் வணங்குமோ? |
| | இதுதனக் கிறைவ னிறக்கில் யாரே |
| | அரச ராகுவர்? - (மௌனம்) |
| | புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும் |
| | வெருளுவர். வெல்லார். ஆயினும் - |
| 15. | முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ? |
| | கருவியுங் காலமு மறியி லரியிதென்? |
| | ஆ ! ஆ ! அயர்த்தோ மயர்த்தோம் ! |
| | மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்று |
| | மயர்த்தோம ! ஆ! ஆ! ஆயிழை யொருவனைக் |
| 20. | கண்டு காமங் கொண்டவ ளல்லள். |
| | பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள். |
| | அருகுள தெட்டியே யாயினு முல்லைப் |
| | படர்கொடி படரும். பலதே வனையவள் |
| | இடமே பலமுறை யேவி லுடன்படல் |