பக்கம் எண் :

மனோன்மணீயம்
32

25.கூடும். கூடிலென் கூடா?
யாவ னஃதோ வருமொரு சேவகன்?

(சேவகன் வர)

சேவகன். ஜய ! ஜய ! விஜயீ பவகுடி லேந்திரா?

(திருமுகம் கொடுக்க)

குடில, நல்ல தப்புறம் நில்லாய். ஓ ! ஓ !
(வாசித்து நோக்கி) சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம்.

(சேவகன் ஒருசாரிருந்து தூங்க)

30.அடுத்தது போலு மிம்மணம். அவசியம்
நடக்கும். நடக்கி னென்? நமக்கது நன்றே.
அரசர்கட் காயு ளற்பமென் றறைவர்.
பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள்
வாழான் வழுதி. வஞ்சிநாட் டார்க்குத்
35.தாழா ரிந்நாட் டுள்ள ஜனங்களும்.
அதுவு நன்றே. - ஆயினுங்
கால தாமசஞ் சாலவு மாகும்.
வேறொரு தந்திரம் வேண்டும். ஆ ! ஆ !
மாறன் மாண்டான். மன்றலும் போனது.
40.சோ னிறுமாப் புடைய தோர் வீரன்
ஆமெனப் பலரும் அறைவர். அதனால்
நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன்
மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற்
படைகொடு வருவன். திண்ணம். பாண்டியன்.
45.அடைவதப் போதியா மறிவம்.
போர்வந் திடிலிவண் நேர்வந் திடமெலாம்.
யாரிற வார்கள்? யாரறி வார்கள்?
முடிதன் னடிவிழில் யாரெடுத் தணியார்?
அரச வமிசக் கிரமம் ஓரில்
50.இப்படி யேமுத லுற்பவ மிருக்கும்.
சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில்
இந்துவி லிரவியில் வந்தோ ரெனவே,
மூட உலகம் மொழியும், யாரே
நாடுவ ராதியை? நன்று நன்றிது !