| | தருமந் தான மென்றுல கறியுங் |
| 85. | கரும மனைத்துஞ் செய்பவன் கருத்தைக் |
| | காணி னாணமாம். அவரவர் தமக்கா |
| | எண்ணிய வெண்ண மெய்துவான் பலவும் |
| | பண்ணுவர் புண்ணியம் போல, எல்லாந் |
| | தந்நயங் கருதி யன்றித் தமைப்போற் |
| 90. | பின்னொரு வனையெணிப் பேணுவ ருளரோ? |
| | புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல |
| | பிதற்றுதன் முற்றும் பித்தே. அலதேல் |
| | யாத்திரை போன நூற்றுவர், சோறடு |
| | பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக |
| 95. | ஒருவரை யொருவ ரொளித்துப் பருமணல |
| | இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு |
| | எட்டுமோ வுலகின் கட்டைச் சிறுமதி? - |
| | ஆயினும், அரசனைப் போலிலை |
| | பேயர் பெரிய மேதினி யெங்குமே. | 2 |
| | |
| | |
| | முதல் அங்கம் : ஐந்தாம் களம் |
| | முற்றிற்று -------- |