ஜீவகன். | | சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே ! |
| | புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு |
| | மருமா னாக மதித்ததும் அவரே. |
| | என்றுங் குழந்தை யன்றே. மன்றல் |
| 5. | விரைவி லாற்ற வேண்டும். நாமிது |
| | வரையும் மறதியா யிருந்தது தவறே |
| | யாம். இனித் தாமச மின்றியிம் மணமே |
| | கருமமாய்க் கருதி முடிப்பாம். |
| | வருமுன் கருது மந்திர வமைச்சே ! | 1 |
| | |
குடிலன், | 10. | இறைவ ! இதுகேட் டெனக்குள வின்பம் |
| | அறைவதெப் படியான்? அனேக நாளாப் |
| | பலமுறை நினைந்த தூண்டிப் பரிசே. |
| | நலமுறப் புரிசை நன்கு முடியும் |
| | அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச் |
| 15. | சற்றும் மறந்தே னன்று, தனியே |
| | கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை |
| | விட்டுள தோவினி வேறொரு காரியம்? |
| | புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன் |
| | காண்டகு மாண்டகை யென்றும், ஞானம் |
| 20. | மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் |
| | திரியுந் தவசிக ளுரைசெய யானுங் |
| | கேட்ட துண்டு, மற்றவன் நாட்டிற்கு |
| | இன்றே தூதுவ ரேவின், மங்கையை |
| | மன்றல் செய்வான் மனதோ வன்றோ |