| 25. | என்றியா மறியலா மெளிதில். அறியார் |
| | பலவும் பழிப்பர். நமக்கதி லொன்றும் |
| | இலை.இன் றேதூ தேவுவம் |
| | பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே. |
| | |
ஜீவ. | | பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை? |
| 30. | பகருதி வெளிப்படப் பண்பாய் |
| | நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே! | 3 |
| | |
குடில, | | எண்ணுதற் கில்லை யிறைவ! அவையெலாம். |
| | கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம். |
| | மணஞ்செய முதன்முதற் பேசி வருதல், |
| 35. | இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே. |
| | அன்றி யாடவர்த் தேடி மன்றல் |
| | சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம். |
| | முன்னைவழக்கு மன்னதே. ஆயினும், |
| | ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை? |
| | |
ஜீவ. | 40. | கூடா தஃதொரு காலும். குடில! |
| | கேடாம் நமது கீர்த்திக் கென்றும் |
| | மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம். |
| | என்னே ஆத்திரம்? நமது |
| | கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? |
| | |
குடில, | 45. | குறைவோ வதற்கு மிறைவ! ஓஹோ! |
| | மூவருந் தேவரும யாவரும் விரும்புநங் |
| | கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக் |
| | கணக்கிட லாமோ? கலிங்கன், சோழன், |
| | கன்னடன் வடிவி லொவ்வார்; காந்தர் |
| 50. | மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன் |
| | குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற் |
| | கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்; |
| | வணங்களில் நிடதன், மராடன் கல்வியில் |
| | நேரார்; மகதன் றீராத் தரித்திரன்; |
| 55. | இன்னம் பலரு மிங்ஙனம் நமது |
| | கன்னியை விழைந்துங் கல்வி வடிவு |