பக்கம் எண் :

மனோன்மணீயம்
37

குணம்பலங் குலம்பொரு ளென்றிவை பலவும்
இணங்கா ரேமாந் திருந்தார். அரசருட்
கொங்கன் றனக்கே யிங்கிவை யாவும்
60.பொருத்த மாயினு மிதுவரைப் பாலியன்
ஆகையி லிவ்வயி னணைந்திலன். எங்ஙனந்
திருத்தமா யவன்கருத் தறிந்திடுமுனம்
ஏவுதுந் தூதரை? ஏதில னன்றே.
ஜீவ,படுமோ வஃதொரு காலும்? குடில
65.மற்றவன் கருத்தினை யுணர
வுற்றதோ ருபாய மென்னுள துரையே.

5


குடில,உண்டு பலவு முபாயம். பண்டே
யிதனைக் கருதியே யிருந்தேன். புதிய
கடிபுரி முடியும் முன்னர்க் கழறல்
70.தகுதி யன்றெனக் கருதிச்
சாற்றா தொழிந்தேன் மாற்றல ரேறே!

6


ஜீவ,நல்லது! குடில! இல்லை யுனைப்போல்
எங்குஞ் சூழ்ச்சித் துணைவர்.
பங்கமி லுபாய மென்கொல்? பகரே.

7


குடில,75.வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச்
செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது, அதன்
அந்தமில் பெருவள மறியார் யாரே?
மருதமு நெய்தலு மயங்கியங் கெங்கும்
புரையறு செல்வம் நிலைபெற வளரும்.
80.மழலைவன் டானம் புலர்மீன் கவர,
ஓம்புபு நுளைச்சிய ரெறிகுழை, தேன்பொழி
புன்னைநுண் டாதாற் பொன்னிறம் பெற்ற
எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும்
அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும்.
85.கேதகை மலர்நிழ லினமெனக் கருதித்
தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த
ஆம்பல்வாய் கொட்டிடுங் கோங்கலர் தாதே ;
வால்வளை சூலுளைந் தீன்றவெண் முத்தம்