| | சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும், அந்தியங் காடியின் சந்தங் காட்டித் |
| 125. | தந்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும் பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார் ; வீறுடை யெருத்தினம் வரிவரி நிறுத்தி யீறிலாச் சகா ரெண்ணில ராமெனப் பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப் |
| 130. | போற்றிய குரவையே பொலிதரு மொருசார் ; சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர் நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர் நடுபவர் களைப்பகை யடுபவ ராதியாக் கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும் |
| 135. | தருமொலி பரந்தே தங்குவ தொருசார் ; குன்றென அரிந்து குவித்திடுஞ் செந்நெற் போர்மிசைக் காரா காரெனப் பொலியக் கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும் மங்கல வொலியே மல்குவ தொருசார் ; |
| 140. | தூவியாற் றம்முட னீவிடிற் சிரிக்குஞ் சிறுமிய ரென்னவச் செழுநில நங்கை உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி உடல்குழைந் தெங்கு முலப்பறு செல்வப் பயிர்மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள், |
| 145. | எனிலினி யானிங் கியம்புவ தென்னை? அனையவந் நாடெலா மரச ! மற் றுனக்கே யுரித்தென வங்குள பாடையே யுரைக்கும். சின்னா ளாகச் சேரனாண் டிடினும் இந்நாள் வரையு மந்நாட் டுரிமை |
| 150. | கொடுத்தது மில்லை, நாம் விடுத்தது மில்லை. பண்டைநம் முரிமைபா ராட்டிட வென்றே கண்டன னிப்புரி. ஆயினும் அதுவிம் மணத்திற் குதவியாய் வந்தது நன்றே. ஆதலி லவன்பால் தூதரை விடுத்துக் |
| 155. | கிழமையும் பழமையு மெடுத்துக் கிளத்தில், நாட்டிய நமது நகர்வலி கருதி |