பக்கம் எண் :

மனோன்மணீயம்
40

மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி
வாதமே பலவு மோதினு மொருவிதம்
ஒப்புர வாகா தொழியான். பின்னர்,
160.அந்நியோந் நியசமா தானச் சின்னம்
ஆகவோர் விவாக மாயின் நன்றெனக்
குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின்,
மறுத்திடா னுடன்மண முடிக்குதும் நன்றே

8


ஜீவ,மெத்தவுங் களித்தோம் ! உத்தமோ பாயம்
165.இதுவே ! குடில ! இதனால்
வதுவையும் நடந்தா மதித்தேம் மனத்தே.

9


குடில,அப்படி யன்றே ! செப்பிய வுபாயம்
போது மாயினு மேகுந் தூதுவர்
திறத்தாற் சித்தி யாகவேண் டியதே.
170.வினைதெரிந் துரைத்தல் பெரிதல. அஃது
தனைநன் காற்றலே யாற்றல். அதனால்,
அன்புங் குடிமைப் பிறப்பு மரசவாம்
பண்பு மறியும் பரவுநூ லுணர்வும்
தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும்
175.வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந்
துணிவுங் காலமுங் களமுந் துணியுங்
குணமும், மந்திரத் தலைவர் துணைமையும்
உடையனே வினையாள் தூதனென் றோதினர்.
அன்ன தூதரை யனுப்பின் மன்னவ !
180.உன்ன தெண்ண முறுமே யுறுதி.
அன்றெனி லன்றே. அதனால்
வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே.

10


ஜீவ,அத்திற முற்று மொத்தவ னாய்நமக்
குரிமை பூண்டநின் னருமை மகன்பல
185.தேவனே யுள்ளான். மேவலர் பலர்பான்
முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான்.
அன்னவன் றன்னை யமைச்ச !
ஏவிடத் தயையா யிசைவாய் நீயே.

11