| குடில, | | ஐய மதற்கென்? ஐய ! என்னுடல் | | 190. | ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும் நினதே யன்றோ ! உனதே வலுக்கியான் இசையா தொழிவனோ ! வசையறு புதல்வன் பாலியன் மிகவும். காரியம் பெரிது. |
| ஜீவ, | | பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம் | | 195. | விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில், நலமா யுரைப்பன் நம்பல தேவன். வருத்த மிவையெலாங் கருத்தி லுணராது உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே யோசனை யின்றி நடேசனை யேவில் | | 200. | நன்றாய் முடிப்பனிம் மன்றல் என்றார். அவர்கருத் திருந்த வாறே ! | | | 12 |
| குடில, | | குற்றமோ அதுவுங் கொற்றவ ! முனிவர் அறிந்ததவ் வளவே யாகும். ஏழை ! துறந்தா ரறிவரோ தூதின் தன்மை? | | 205. | இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும் எல்லா மில்லை ; ஆதலா லெவருங் கட்டுக கோவில், வெட்டுக ஏரி, என்று திரிதரு மிவர்களோ நமது நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்? | | 210. | இராச்சிய பரண சூத்திரம் யார்க்கும் நீ்ச்சே யன்றி நிலையோ? நடேசன் ! யோசனை நன்று ! நடேசன் ! ஆ ! ஆ ! ஏதோ விவ்வயிற் சூதாப் பேதையர் உள்ளம் மெள்ள வுண்டு மற்றவர் | | 215. | அம்மை யப்பரை யணுகா தகன்று தம்மையும் மறந்தே தலைதடு மாறச் செய்யுமோர் சேவக முண்டுமற் றவன்பால். ஐயமொன் றில்லை. அதனான் மொய்குழல் மாதர்பாற் றூதுசெல் வல்லமை கூடும். | | 220. | பித்த னெப்படிச் சுந்தரர்க்கு ஒத்த தோழனா யுற்றனன் ! வியப்பே ! | | | 13 |
|
|
|