| ஜீவ, | | முனிவரும் வரவர மதியிழந் தனரே. இருக்கும். இருக்கும். இணையறு குடில ! பொருக்கெனப் போயுன் புதல்வற் குணர்த்தி | | 225. | விடுத்திடு தூது விரைந்து. கால விளம்பனஞ் சாலவுந் தீதே. | | | 14 |
| குடில, | | ஈதோ அனுப்பினேன். இன்றிம் மாலையில் தூது செல்வான் றொழுதுன் னநுமதி பெறவரு வான்நீ காண்டி. | | 230. | இறைவ ! மங்கல மென்றுமுன் னடிக்கே ! | | | 15 | | | (குடிலன் போக) |
| ஜீவ, (தனதுள்) | | நல்லது ! ஆ ! ஆ ! நமது பாக்கியம் அல்லவோ விவனைநா மமைச்சனாய்ப் பெற்றதும்? என்னே ! இவன்மதி முன்னிற் பவையெவை? | | | (சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க) |
| (பிரபுக்களை நோக்கி) | | வம்மின். வம்மின். வந்து சிறிது, | | 235. | கால மானது போலும். நமது மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு இருந்தோ மிதுவரை. குடிலன் மிகவும் அருந்திறற் சூழ்ச்சியன். |
| முதற் பிரபு. | | அதற்கெ னையம்? | | | சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி | | 240. | இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர். எல்லை யுளதோ விவன்மதிக் கிறைவ ! வல்லவன் யாதிலும். |
| நாராயணன். (தனதுள்) | | நல்லது கருதான். | | | வல்லமை யென்பயன் ! |
| 2-ம் பிரபு. | | மன்னவ! அதிலும் | | | உன்றெல் குலத்தி லுன்றிரு மேனியில் | | 245. | வைத்த பரிவும் பத்தியு மெத்தனை ! குடிலனும் குடிக்கே யடிமை பூண்ட ஆஞ்ச னேயனோ வறியேம் ! |
|
|
|