பக்கம் எண் :

மனோன்மணீயம்
43

நாரா, (தனதுள்)

முழுப்பொய்.

வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன்
விடுப்பனோ விடமென? குடிப்பனே !

சேவகன்.

கொற்றவ !

250.நேற்று மாலையி னின்றிரு வாணையிற்
சென்றுழித் திருமுக நோக்கி யேதோ
சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால்
தந்தன னெனக்கித் தரள மாலை.

நாரா, (தனதுள்)எதுவோ பொல்லாங் கெண்ணினன். திண்ணம்.

ஜீவ,255.பார்மின், பார்மின். நம்மிசை வைத்த
ஆர்வமு மன்பும். ஆ ! ஆ !

நாரா, (தனதுள்)

யாதும்

பேசா திருக்கி லேசுமே நம்மனம்.
குறியாற் கூறுவம். அறிகி லறிக.

(நாராயணன் செல்ல)


3 - ம் பிரபு.சாட்சியு மோகண் காட்சியா மிதற்கும்!
260.அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ?
எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி
பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த
புத்திரன் வீரவா கிவர்முதற் போற்றிய
வெத்திறத் தவரு மிறைவ ! இவனுக்
265.கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்?

(நாராயணன் மூக்கிற் கரி தேய்த்து வர)


ஜீவ, (நாராயணனை நோக்கி)ஏ ! ஏ ! நாரணா கரியா யுன்மூக்
கிருந்தவா றென்னே? ஏ ! ஏ ! இதுவென் !

நாரா,மூக்கிற் காயி ருளரென நாயனார்
தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம்
270.உள்ளநின் னருகவ ரில்லா ராவரோ?

ஜீவ,ஓகோ ! ஓகோ ! உனக்கென் பைத்தியம் !

யாவரும்.ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ!

(யாவரும் நகைக்க)