| ஜீவ, (பிரபுக்களை நோக்கி) | | நாரணா ! நீயும் நடேசன் றோழனே. | | | நல்லது ; விசேடமொன் றில்லை போலும். |
| முதற் பிரபு. | 275. | இல்லையெம் மிறைவ ! எல்லாப் புவியுநின் வாகுவே தாங்க ! மங்கலம் வரவே ! | | | (பிரபுக்கள் போக) |
| ஜீவ, | | நாரா யணா ! உனக் கேனிப் பித்து? தீரா விடும்பையே தெளிவி லையுறல். |
| நாரா, | | எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை | | 280. | கோடிய மாந்தர் கோடியின் மேலாம். |
| ஜீவ, | | எதற்குந் திருக்குற ளிடந்தரும் ! விடுவிடு. விரும்பி யெவருந் தின்னுங் கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே. | | | 16 | | | (அரசனும் சேவகர்களும் போக) |
| நாரா, (தனிமொழி) | | ஐயோ ! இதற்கென் செய்வன் ! அரசன், | | 285. | உறுதியா நம்பினன். சிறிதும் பிறழான். வெளுத்த தெல்லாம் பாலெனு மெய்ம்மை யுளத்தான். களங்க மோரான். குடிலனோ சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான் ஓதுவ வுன்னுவ செய்குவ யாவுந் | | 290. | தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா நல்லவன் போலவே நடிப்பான். பொல்லா வஞ்சகன். மன்ன னருகுளோ ரதனை நெஞ்சிலு நினையார். நினையினு முரையார். | | 295. | இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர் வடித்து வடித்து மாற்றொலி போன்றே. தடுத்து மெய்ம்மை சாற்றுவர் யாரே? என்னே யரசர் தன்மை ! மன்னுயிர்க் காக்கமு மழிவு மவர்தங் கடைக்கண் | | 300. | நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார் ; பெற்றவப் பெருமையின் பராம் |
|
|
|