பக்கம் எண் :

மனோன்மணீயம்
45

உற்றுநோக் குவரே லுடன்நடுங் காரோ?
கருப்போ தேனோ என்றவர் களிப்பது
நெருப்பா றும்மயிர்ப் பாலமு மன்றோ?
305.விழிப்பா யிருக்கிற் பிழைப்பர். விழியிமை
கொட்டிற் கோடி பிறழுமே. கொட்டும்
வரலாற் றேளும் வாயாற் பாம்புங்
காலும் விடமெனக் கருதி யாவும்
அடிமுதன் முடிவரை யாய்ந்தா ராய்ந்து
310.பாரா ராளும் பாரென் படாவே?
யாரை யானோவ ! அதிலுங் கொடுமை !
அரசர்க் கமைச்ச ரவயவம் அலரோ?
உறுப்புகள் தாமே யுயிரினை யுண்ண
வொருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம்
315.மறந்து மன்னுயிர்ச் சுகமே மதித்தங்
கிறந்தசிந் தையனோ விவனோ வமைச்சன்?
குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப்
பொய்யு மெய்யும் புலப்பட வுரைக்க
என்றால், நோக்க நின்றார் நிலையில்
320.தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ்
சான்றொடு காட்டுந் தன்மைய வலவே.
சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை
காட்டினுங் கீறிய வரையலாற் காணார்.
என்செய? இனியா னெப்படிச் செப்புவன்?
325.நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ்
சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும்
ஓரில் யாதோ பெரிய வுறுகண்
நேரிடு மென்றென் னெஞ்சம் பதறும்.
என்னே யொருவன் வல்லமை !
330.

இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே.

17

(நாராயணன் போக)

இரண்டாம் அங்கம் ; முதற்களம்

முற்றிற்று.