இரண்டாம் அங்கம். 2 - ம் களம். இடம் : ஊர்ப்புறத்து ஒருசார். காலம் : வைகறை. நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க. (இணைக்குறளாசிரியப்பா) | நடராஜன், (தனிமொழி) | | பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம். ஓவியத் தொழில்வலோ னீவியக் கிழியில் | | 5. | தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட வுருவுதோன் றாவண மொன்றாய்ச் செறிந்து கருகிண் மயங்கிய காட்சி கழிந்து | | 10. | சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே ! சூட்டுடைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து | | 15. | ஒருமுறை கூவி யுழையுளார் புகழ வுற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும், இருட்பகை யிரவி யிருளெனத் தம்மையுங் கருதிக் காய்வனோ வென்றயிர்த் திருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி | | 20. | மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம் பதறியெத் திசையிலும் சிதறியோடு தலும், பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டமாய் அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை | | 25. | அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில் |
|