| | இசையறி மாக்களின் ஈட்டம் போல வசையறு பாடல் வழங்கலு மினிதே ! அதுவென் ! ஆஹா ! அலகா லடிக்கடி ததையுந் தஞ்சிறை தடவி விளக்கிக் |
| 30. | கதுவுஞ் காத லாணையிட் டறைந்து பின்புசென் றோயா தன்புபா ராட்டும் இவ்விரு குருகுங் காதலர், கண்டு மலர்நிலை காணார் போல்துகிர்த் துண்டங் கொண்டு பாலைச் சொரிந்த |
| 35. | பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி யுழையுழை யொதுங்கி யோடிப் போலிக் கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறைதலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலு மியல்பே போலும். |
| 40. | வாணீ ! மங்காய் ! வாழி நின்குணம் ! ஒருதின மிவ்வயி னுணையான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு வாங்கியும், மதியா தவள்போ லங்கே |
| 45. | யோடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடனீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணீ ! அறிவேன் ! அறிவேன் ! |
| 50. | உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் - |