பக்கம் எண் :

மனோன்மணீயம்
48

பேணிய என்குடிப் பேர்பெரி தாத லினால்
வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ.

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

நட, (தனதுள்)55.ஐயோ ! இதுவென் ! கட்டம் ! கட்டம் !

(ஆசிரியத்துறை)

நற்றாய்.நாணிக் கவிழ்த்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன்
ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம்.
காணப் பிறர்பொருள் கள்ளல மாதலி னால்
வாணிக் குரித்தெனக் கேட்டபின் வௌவலம் வாரலையோ.

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

நட, (தனதுள்)நாராய ணன்அன் றுரைத்தது மெய்யே !

(ஆசிரியத்துறை)

நற்றாய்.நாணமிலா மகள் சாவுக் கினிவெகு நாள்களில்லை
காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டு கொள்வை.
பேணிய நின்வாழ் வேபெரி தாதலி னால்
வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ.

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

நட, (தனதுள்)ஆயினு மித்தனை பாதகனோ விவன் !

பலதேவன்.எவருனக் குரைத்தா ரித்தனை பழங்கதை
சவமவ ளெனக்கேன்? இவள்சுக மெங்கே?
60.பொய்பொய் நம்பலை, ஐயமெல் லாம்விடு.
பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது.
சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச்
சென்றிதோ விரண்டு நாளையிற் றிரும்புவன்.
இச்சிறு பொற்றொடி மைச்சினிக்குக் கொடு.
65.வருகுவ னீதோ ! மறக்கன்மி னென்னை !

(நற்றாய் போக. பலதேவனும் தோழனும் நடக்க.)


தோழன்,செவ்விது ! செவ்விது ! இவ்விட மெத்தனை !
ஐந்தோ? ஆறோ?

பலதே.

அறியேன். போ ! போ !

இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில்.