| தோழன். | | வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. |
| பலதே. | 70. | வாணியாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த வலகையா யினுமென்? கணிசத் திற்கது. காரியத் திற்கிது. வாவா போவோம். வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். | | 75. | எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. | | | (பலதேவனும் தோழனும் போக.) |
| நட, | | கொடுமை ! கொடுமை ! இக்கொடும்பா தகன்சொல் கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும். | | 80. | இத்தனை துட்டரு மிருப்பரோ வுலகில்? ஐந்தோ ! ஆறோ ! அறியான் ! பாதகன் ! நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுக மிதுவாம் ! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும் ! ஏற்கும் ! | | 85. | ஒருபிடி யாயவ னுயிரினை வாங்க ஓடிய தெண்ணம். உறுத்தின தென்கை ! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவ னனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ வது? | | | (நாராயணன் வர) |
| 90. | வா வா, நாரணா ! | | நாராயணன். | | ஏ ! ஏ ! என்னை ! | | | சினந்தனை தனியாய்? |
| நட, | | என்இத் தீயவன் | | | அனந்தைக் கேகுங் காரணம்? |
| நட, | | அறிவை ! நீவிளை யாடலை. அறைதி. |
| நாரா, | | வதுவை மனோன்மணி தனக்குவழங்கிட - |
| நட, | 95. | அதுவும் நன்றே ! கெடுவனிவ் வரசன்! |
|
|
|