பக்கம் எண் :

மனோன்மணீயம்
50

நாரா,அடுத்ததுவாணியின் மணமும், அறைந்துளேன்

நட,விடுத்திடல் வெண்ணம். தடுக்கயா னறிவன்.
விடுத்தனன் கண்டும். எரித்திடுவேன் நொடி.
உறுதி யொன்றுளதேல் ! உரையாய் நடந்தவை.

நாரா,100.முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன்
வதுவை யவ்வழியே யாற்றிட வாணியை
அதட்டினன்.

நட,

அதற்கவள்?


நாரா,

மறுத்தனள்.


நட,

எங்ஙனம்?


நாரா,‘இறக்கினு மதற்கியா னிசையேன்’ என்றாள்.

நட,அரைக்கண முன்ன மறிந்திலே னிம்மொழி.

நாரா,105.என்னே யுன்மதி ! ஏந்திழை யார்சொல்
நீர்மே லெழுந்தாம். யாரறி வாருளம்?
மாறி நாடொறும் வேறுபா டுறுமதி
யெண்ணுட் பட்டு நிண்ணயங் கூடலாற்
பெண்கள் நிலையிற் பெரி்துந் திடனே.
110.புண்கொள் நெஞ்சொடு புலம்புகின்றாய் மிக.
காதலா மூழிக் கனன்முன் வையாய்
மாதரார் கட்டுரை மாயா தென்செயும்?
அக்கண முற்ற துக்கந் தூண்டக்
கன்னியா யிருப்ப னென்றா ளன்றி
115.யன்ன தவள்கருத் தாமோ?

நட,

அறியாய் !

புருடரே புலையர். நிலையிலாப் பதடிகள்
இருளடை நெஞ்சினர். ஈரமி லுளத்தர்.
ஆணையு மவர்க்கொரு வீணுரை. அறிந்தேன்.
தந்நய மன்றிப் பின்னொன் றறியாக்
120.காதகர். கடையர். கல்வியில் கசடர்.

நாரா,ஓதி யுணரினும் மாத ருள்ளம்
அலையெறி கடலினுஞ் சலன மென்ப.

நட,திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி,