பக்கம் எண் :

மனோன்மணீயம்
51

கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை.
125.தியக்கமு மயக்கமுஞ் செறிவ தரிவையர்,
உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி,
பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை
விள்ளா முரணும், மெய்ம்மையில் தெளிவும்,
உள்ளர். அவர்தம் முறுதிநீ யுணராய்.
130.சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப்
பற்றியே சுழலும் ; அப் படியலர் புருடர்.
கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண்
டலைதருங் கொடியவிவ் வலகைகள் வழியே.
புருடரோ விவரும் ! கருவுறுங் குழவிமெய்
135.மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர்.
அவாவிற் களவிலை. அன்போ அறியார்.
மணமு மவாக்கொரு வாணிகம் ! அந்தோ !
சீ ! சீ ! என்னித் தீயவர் செய்கை?
மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை
140.ஆம்பெருங் கடலுட் போம்மரக் கலனாம்
ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று
நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம்
நிண்ணய மற்ற வெண்ண மியக்கச்
சென்றுழிச் சென்று நன்றறி வின்றி
145.அலையா வண்ணம், அறத்துறைக் குடாவில்
நிலைபெற நிறுத்துநங் கூரமாய், பின்னுஞ்
செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக்
கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி
ஆசையாந் திசைதொறும் அலைந்து திரிந்து
150.கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர்
அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச்
சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய்,
நின்றது மங்கையர் நிலைமை யென்று
நினையா மனிதர், விலங்கினுங் கீழாய்
155.அனையார் தருசிற் றின்பமே யவாவி
வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத்
தாழ்த்துஞ் சேறா மாற்றுவர். தவத்தால்