| | மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது அந்தோ ! தம்மெய் யரிவார் போலத் |
| 160. | தனியே தளருந் தமக்குத் துணையாய் வருபவர் தமையும் பகைவரா நலிந்து பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம் மதிகே டென்னே ! துதிபெறு மன்புநற் குணமு முளாரில் துணைவ ராயின் |
| 165. | இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர் நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம் பெற்றவா றன்றோ? எற்றே மடமை ! கேட்டிட வேட்டவை யாவையு மீயுங் கற்பக தருவென வற்பமுங் கருதாது |
| 170. | அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் கரிபெற முயன்ற கம்மிய னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந் துன்பமுந் தனதா அன்பு பாராட்ட, |
| 175. | மெள்ளமெள் ளத்தன் னுள்ளம் விரித்துப் பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத் தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும் ஓய்வுறச் செய்து,மற் றென்றாய் நின்ற |
| 180. | எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி யதனுள் மூழ்கிட யாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ் இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி, உடற்றின வடக்குமா வுரைஞ்சிடு தடியென |
| 185. | மடத்தனங் கருதித் தம்மையும் பிறரையுங் கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே ! நாரணா ! இவ்வயிற் கேட்டதுங் கண்டதுந் தீராத் துயரமே செய்வது, செல்குவன். ஏதா யினுமினி யெய்தில், |
| 190. | ஓதாய் முனிவ ருறையு ளுற்றே. |
| | 1 |
| | (நடராஜன் போக) |