| புருடோத்தமன். (தனிமொழி) | | யார்கொலோ வறியேம் ! யார்கொலோ வறியேம் வார்குழல் துகிலொடு சோர மாசிலா மதிமுகங் கவிழ்த்து நுதிவேற் கண்கள் விரக தாபத்தால் தரளநீ ரிறைப்ப |
| 5. | பரிபுர மணிந்த பங்கயம் வருந்துபு விரல்நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து விண்ணணங் கனைய கன்னியர் பலரென் கண்முன் னின்றங் கிரக்கினுங் கலங்காச் சித்தம் மத்துறு தயிரிற் றிரிந்து |
| 10. | பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ? எவ்வுல கினளோ? அறியேம். இணையிலா நவ்வியு நண்பு நலனு முடையவள் யார்கொலோ? நாள்பல வானவே. ஆ ! ஆ ! விழிப்போ டென்கண் காணில் ! - வீண் ! வீண் ! |
| 15. | பழிப்பாம் பிறருடன் பகர்தல். பகர்வதென்? கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ? நனவினு மொழுங்காய் நாடொறுந் தோற்றும். பொய்யல. பொய்யல. ஐய மெனக்கிலை. நாடொறு மொருகலை கூடி வளரும் |
| 20. | மதியென வெழில்தினம் வளர்வது போலும். முதனாள் முறுவல் கண்டிலம் ; கடைக்கணில் ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது. நேற்றிராக் கண்ட தோற்றமென் னெஞ்சம் |