| | பருகின தையோ ! கரிய கூந்தலின் |
| 25. | சிறுசுருள் பிறைநிகர் நறுநுதற் புரளப் பொருசிலைப் புருவ மொருதலை நெகிழ்த்துச் செவ்வரி படர்ந்த மைவழி நெடுவிழி உழுவலோ டென்முக நோக்க வெழுங்கால் என்னோக் கெதிர்ப்படத் தன்னோக் ககற்றி, |
| 30. | வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய சேணிடைத் தோன்றுஞ் செக்கர்போற் கன்னம் நாணொடு சிவக்க, ஊர்கோள் நாப்பண் தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி சுற்றிய வதனஞ் சற்றுக் கவிழ்த்தி, |
| 35. | அமுதமூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து மந்த காசந் தந்தவள் நின்ற நிலைமையென் னெஞ்சம் நீங்குவ தன்றே ! தேவ கன்னியர் முதலாந் தெரிவையர் யாவரே யாயினும் மென்கண் தனக்கு |
| 40. | மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ? அறியுமா றிலையே ! அயர்க்குமா றிலையே ! உண்டெனிற் கண்டிடல் வேண்டும். இலையெனில் இன்றே மறத்தல் நன்றே. ஆம்! இனி மறத்தலே கருமம், மறப்பது மெப்படி? |
| 45. | போரெவ ருடனே யாயினும் புரியிலவ் ஆரவா ரத்தி லயர்ப்போ மன்றி - |
| | (சேவகன் வர) |