| | பொங்கலைப் புணரிசூழ் புவிபுகழ் சுமக்கத் | | 55. | தன்தோள் தாரணி தாங்க வெங்கும் ஒன்னார் தலையொடு திகிரி யுருட்டிக் குடங்கை யணையிற் குறும்பர் தூங்க இடம்பாாத் தொதுங்குந் தடமுற் றத்து மேம்படு திருநெல் வேலிவீற் றிருக்கும் | | 60. | வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த தூதியான். என்பே ரோதில்அவ் வழுதியின் மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன், பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன் குடிலேந் திரன்மகன் - |
| புரு. (தனதுள்) | | மடையன். | | | வந்ததென்? |
| பலதே. | 65. | அப்பெரு வழுதி யொப்பறு மாநகர் நெல்லையிற் கண்டு புல்லா ரீட்டமும் அரவின தரசும் வெருவி ஞெரேலெனப் பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம் ஆணவத் தாழ்ச்சியு நாண வகழ்வலந் | | 70. | தொட் டஞ்ஞானத் தொடர்பினு முரமாய்க் கட்டிய மதிற்கணங் காக்க விடயத்து எட்டி யழுத்தி யிழுக்கும் புலன்களின் யந்திரப் படைக ளெண்ணில வியற்றி - |
| பலதே. | | மன்னவா ! நீயாள் | | 75. | வஞ்சிநா டதற்குத் தென்கீழ் வாய்ந்த நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே? எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு பரவு பாடையும் விரவு மாசாரமும் நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா - |
| புரு. | 80. | நல்லது ! சொல்லாய். |
| பலதே. | | தொல்லையாங் கிழமைபா | | | ராட்டித் தங்கோல் நாட்டி நடத்த வல்ல மன்னவ ரின்மையால் வழுதிநாட்டு எல்லையுட் புகுந்தங் கிறுத்துச் சின்னாள் |
|
|
|