| | சதியாய் நீயா சாண்டாய் : - |
| பலதே. | 85. | அன்னதன் னுரிமை மீட்க வுன்னியே முதுநக ராமெழின் மதுரை துறந்து நெல்லையைத் தலைநகர் வல்லையி லாக்கி ஈண்டின னாங்கே. |
| பலதே. | | உதியனும் செழியனும் | | 90. | போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்? பங்கமி லிரவியுந் திங்களுந் துருவி எதி்ர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள் மறைய இவ்வுலகில் வயங்கிருள் நிறையும். அவரந் நிலையி லமாந்திடி லவ்விருள் | | 95. | தவறாத் தன்மைபோல் நீவி ரிருவருஞ் சமர்செயி லுலகந் தாங்கா தென்றே எமையிங் கேவி யிவ்வவைக் கேற்றவை நீதியா யெடுத்தெலா மோதி, நன் செய்நாடு உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே | | 100. | கடனெனக் கழறிப் பின்னிக ழன்கருத்து அறிந்து மீளவே விடுத்தான். |
| புரு. | | ஆ ! ஹா ! | | | முடிந்ததோ? இலையெனின் முற்றுஞ் செப்புவாய். |
| பலதே. | | மேலு மொருமொழி விளம்புதும் வேந்தே ! சாலவும் நீவிர் பகைக்கிற் சகமெலாம் | | 105. | ஆழ்துயர் மூழ்கலு மன்றி உங்கட்கு ஏது விளையுமோ அறியேம். ஆதலின், அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன் வெஞ்சமர் விளைத்தல் நன்றல. |
| புரு. (பயந்தார்போல) | | ஆ ! ஆ ! |
|
|
|