பக்கம் எண் :

மனோன்மணீயம்
58

பலதே.நன்செய்நா டினிமேன் மீ்ட்டு நல்கலும்
110.எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில்
உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில்
திரைக்கட லமுதே யுருக்கொண் டதுபோல்
ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண
விரைமலர் தேடளி வீற்றிருங் கிருந்தது.
115.அன்னவள் மன்ன ! நின் அரியணை யமரில்
தென்னவன் மனமுந் திருந்தும். நன்செய்நா
டுன்னது மாகும்.

புரு.

உண்மை ! ஓ ஹோ !

வண்டு மலரிடை யணையவுன் நாட்டிற்
கொண்டு விடுவரே போலும். நன்று !
120.கோதறு மிருபுறக் காத லன்றியெம்
நாட்டிடை வேட்டன்மற் றில்லை. மேலும்நம்
அரியணை யிருவர்க் கிடங்கொடா தறிகுதி.

பலதே.(தனதுள்)சுரிகுழல் வதுவை போனது. சுகம் ! சுகம் !

புரு.ஆதலின் முடிவில்நீ யோதிய தொழிக.
125.நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற
வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே.
அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து
நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து
முடியுடன் செங்கோ லடியிறை வைத்துப்
130.புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க,
அனையர்தம் மனைவிய ரவாவிய மங்கல
நாணே யிரந்து நாணந் துறந்து
கெஞ்சுமெஞ் சபையில், அஞ்சா தெமது
நன்செய்நா டதனை நாவுகூ சாமற்
135.பாண்டியற்கு அளிக்க என்றுரை பகர்ந்தும்,
ஈண்டுநீ பின்னு முயிர்ப்பது தூதுவன்
என்றபே ரொன்றா லென்றே யறிகுதி.
கருதா துனையிங் கேவிய கைதவன்