பக்கம் எண் :

மனோன்மணீயம்
59

ஒருவா ரத்திற் குள்ளா யவன்முடி
140.யார்பகை யின்மையா லிதுகா றணிந்து
பார்வகித் தானெனப் பகரா தறிவன்.
விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும்,
அரிக்குநே ரென்னநீ யறைந்த அரசனும்
இருப்பரேற் காண்குவம் அவர்வலி யினையும்.
(சேவகனை நோக்கி)145.அருள்வர தனையிங் கழையாய் ! சேவக !

(அருள்வரதன் வர)


பலதே.(தனதுள்)

சிந்தனை முடிந்தது.


அருள்வரதன். 

வந்தனம் ! வந்தனம் !


புரு. நல்லது ! செழியன் நெல்லையே நோக்கி
நாளையா மேகுவம். நமதுபோர் வீரரவ்
வேளையா யத்தமாய் வைப்பாய்.

அருள்,

ஆஞ்ஞை,

 

புரு. (பலதேவனை நோக்கி)150.செல்லாய் விரைவில். தென்னன் போர்க்கு
வல்லா னென்னில் வாரமொன் றிற்குள்
துன்னிய சேனையுந் தானும்நீ சொன்ன
கடிபுரி பலமாக் காக்க. இல்லையேல்,
முடிநம் அடியில் வைத்து நாமிடும்
155.ஆணைக் கடங்கி யமர்க. எமதிடம்
வீணுக் குன்னை விடுத்தகை தவற்கு
வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே
யெஞ்சா தியம்புதி. ஏகாய், ஏகாய் !

(பலதேவன் போக)

 

(தனதுள்)முட்டா ளிவனை விட்டவன் குட்டுப்
160.பட்டபோ தன்றிப் பாரா னுண்மை.
பச்சாத் தாபப் படுத்துவம். நிச்சயம்.
நண்ணிய நமது கனாவின்
எண்ண மேகினு மேகு மினியே.

2

(புருடோத்தமன் போக)

(காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச்சுற்றி நிற்க)