| | (நிலைமண்டில ஆசிரியப்பா) | | அருள், | | தீர்ந்தது சூரரே ! நுந்தோள் தினவு. | | 165. | நேர்ந்தது வெம்போர். |
| முதற்படைஞன். | | நொந்தோம் ; நொந்தோ மிதுகா றுறங்கி. |
| யாவரும். | | உய்ந்தோம் ; உய்ந்தோம், வாழுக வுன்சொல் ! |
| 2 - ம் படை, | | பெரும்போ ரிலாநாள் பிறவா நாளே. |
| 3 - ம் படை, | | மெய்யோ? பொய்யோ? ஐய ! இதுவும். |
| 4 - ம் படை, | 170. | யாவரோ பகைவர்? அருளா பரணா ! தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்? |
| யாவரும் (இகழ்ச் சியாய்) | | பாண்டியன் ! சீச்சீ ! பகடி ! |
| அருள், | | ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம். - |
| யாவரும். | | வியப்பு ! வியப்பு ! |
| 3 - ம் படை, | | வேற்றா ளொருவனென் | | 175. | அயற்புறம் போனான் ; அவன்முகம் நோக்குழி வியர்த்தனன் ; தூதுடை கண்டு விடுத்தேன். |
| முதற்படை, | | அவன்றான் ! அவன்றான் ! அவன்றான் ! தூதன் |
| 4 - ம் படை, | | யாதோ காரணம்? ஓதாய். தலைவா ! |
| 2 - ம் படை, | | அப்பந் தின்னவோ? அலால்குழி யெண்ணவோ | | 180. | செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சீ ! |
| அருள், | | நல்லது வீரரே ! நாளை வைகறை நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச் செல்லற் குரியன திட்டஞ் செய்வான் வல்லையி லேகுதும். மங்கல முமக்கே. | | | 3 | | | (அருள்வரதன் முதலியோர் போக) |
இரண்டாம் அங்கம் : 3 - வது களம் முற்றிற்று.
|