மூன்றாம் அங்கம் 1 - வது களம் இடம் : பாண்டியன் அரண்மனை. காலம் : காலை. ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை. (நிலைமண்டில ஆசிரியப்பா) | ஜீவகன். | | ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச ! நின்தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்று மொருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையுங் கல்வியும் | | 5. | உபாயமும் யாவு முடையான் ; அதனால் அபாயங் கருதிநீ யையுறல் வீண் ! வீண் ! |
| குடிலன், | | பலதேவ னாலொரு பழுதுறு மெனவெனக் கிலையிலை யையஞ் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் | | 10. | முயற்சியின் மதியின் முதியோ னெனவே மொழிகுவர். அவனாற் பழுதிலை. கொற்றவ ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினுங் கொடிய நெஞ்சினர், அவர்தாங் கெஞ்சிடின் மிஞ்சுவர் : மிஞ்சிடிற் கெஞ்சுவர் : | | 15. | என்னுந் தொன்மொழி யொன்றுண் டதனால் மன்னவ ! சற்றே மருளுமென் னுளம். அன்றியும் புருடோத் தமனெனு மரசன் கன்றுஞ் சினத்தோ னென்றார் பலரும். |
| ஜீவ, | | சினத்தோ னாயினென்? தேவருந் தத்தம் | | 20. | மனத்தே யவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவு முருவும், பெருகும் அருளுறை யகமும், மருளறு முணர்வும், முன்னமே யிருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் | | 25. | குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில், செறித்திடுஞ் சிறையினை யுடைத்திடும்புனல்போல் |
|