பக்கம் எண் :

மனோன்மணீயம்
63

தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவ னிப்பால்
தலையா லோடி வருவன். உனக்கு
மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே !

குடில,30.முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர்
எனநாம் நினைப்பதற் கில்லை.நம் மமுதின்
எழிலெலா மெங்ஙனம் முனிவோர் மொழிவர்?
துறந்தார்க் கவைதாந் தோற்றுமோ மறந்தும்?
சிறந்த நூலுணர்வுந் தெளிந்த தோருளமுஞ்
35.செப்பின ரென்றிடி லொப்பலாந் தகைத்தே.
ஆயினும், மலையநாட் டரச னமது
தாயின் றன்மை சகலமு மி்ப்போது
அறியா தொழியான். அயிர்ப்பொன் றில்லை.
நெறிமுறை சிறிதும் பிறழா நினது
40.தூதுவன் யாவு மோதுவன் திண்ணம்.
அம்ம ! தனியே யவன்பல பொழுதும்
மம்ம ருழன்றவன் போன்று மனோன்மணி
அவயவத் தழகெலாம் மாறா தறைந்தறைந்து,
‘இமையவர் தமக்கு மிசையுமோ இவளது
45.பணிவிடை? நமது பாக்கிய மன்றோ
அணிதா யிருந்திவட் காம்பணி யாற்றதும்?
என்றுமிப் படியே யிவள்பணி விடையில்
நின்றுநம் முயிர்விடி லன்றோ நன்றாம்?’
என்றவன் பலமுறை யியம்பல்கேட் டுளனே

ஜீவ,50.ஐயமோ? குடிலா ! மெய்ம்மையும் இராஜ
பத்தியு நிறைந்த பலதே வன்றன்
சித்த மென்குல திலகமாந் திருவுடன்
பரிவுற லியல்பே. அரிதாம் நினது
புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு
55.ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிலும்?

குடில,அதுகுறித் தன்றே யறைந்ததெம் மிறைவ !
மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம்
அறியினுஞ் சேரன் வெறிகொளுஞ் சிந்தையன்
ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ,