| 60. | யாதோ வெனவென் மனந்தா னயிர்க்கும். அவன்குண மொருபடித் தன்றே. அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவ னென்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். |
| ஜீவ, | | ஆம் ! ஆம் ! அறிந்துளேம். ஏமாப் படைத்த | | 65. | தன்னுளம் வியந்தவை யின்னவென் றில்லை. வேதம் வகுத்த வியரசன் வியந்து போற்றினும் பொருட்டா யெண்ணான் ; புலையன் சாற்றுத லொருகால் தான்மகிழ்ந் திடுவன் ; ஒருவன் றனதடி யிணையடைந் துறவே | | 70. | பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன் ; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன், மலரிடிற் காய்வன் ; பரலிடின் மகிழ்வன் ; பெரியோர் சிறியோர் பேதைய ரறிஞர் | | 75. | உரியோ ரயலோ ரென்றவ னொன்றும் உன்னான். ஆயினு மின்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா ! |
| குடில, | | அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும் | | 80. | இணையிலாச் சேனையு மீறிலா நிதியுந் துணிவறா வுளனும் பணிகிலா வுரனும் உனைவிட லெவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனுஞ் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே | | 85. | யுரைதா வுன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்கீழ் வளர்ந்தவன் அலனெனுந் தன்மைநீ யாய்ந்திலை போலும். நன்றுதீ தென்றவ னொன்றையு நாடான் என்றிடில் நாஞ்சொலும் நன்மையு மெங்ஙனம் | | 90. | நாடுவ னெனவெனக்கு ஓடுமோர் நினைவே. |
| ஜீவ, | | ஒக்கும் ! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும் : குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் |
|
|
|